பண்பாடு...

பதிவுலக நண்பர்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள்.

கலைஞ்சர் தொலைகாட்சியில் ஒரு புத்தாண்டு பட்டிமன்ற நிகழ்ச்சியில் ஒரு பேராசிரியர் அவர் மாணவர் எழுதிய கவிதையாய் இதை கூறினார்.

பல்லவனில் இடிபாடு
பக்கத்தில் தடிமாடு
பட்டணத்தில் பண்பாடு
படுகின்றது படாதபாடு.

எனக்கு உடன் நினைவுக்கு வந்தது பதிவர்களின் பண்பாடு. அழகிய ஈரோடு நிகழ்விற்க்குப்பின் தமிழ்மணத்தில் பெரும் கூப்பாடு. நற்குடியில் ஆரம்பித்து...

பதிவர்களின் பண்பாடு...

பதிவுன்னு மொக்கைய போடு
பெயரில்லாம பின்னூட்டம் போடு

மீள் பதிவா போட்டதையே போடு
மீத பஃர்ஸ்டுன்னு அட்டெண்டன்ச போடு

படிச்சி பிடிச்சா ஓட்டப்போடு
பதிவு பிடிக்காட்டி ஓடிப்போய்டு

பாஃளோயர் இருந்தா காட்டு நீ வித்த
சிங்கிளா இருந்தா மவனே நீ செத்த

தொழிலல்ல சோசியம்
ஆரம்பத்தில் ஓசியாம்
நெருங்கினால் காசியாம்

ஒரு பதிவு
ஒருவருக்கு சந்தனம்
ஒருவருக்கு சாணி

ஒரு பதிவு
ஒருவருக்கு பழுது
ஒருவருக்கு பாம்பு

பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு

பதிவு பழுதோ பாம்போ...
பழுதெனில் பற்றப் பழகு
பாம்பெனில் தாண்டப் பழகு

ரௌதிரம் பழகு... ரௌதிரம் செய்னு சொல்லலியே!

சமைத்துப் பார்... சாப்பிட சொல்லலியே!!

களவும் கற்று மற... உன்னை திருட சொல்லியே!!!

படித்த பதிவருக்கு என்ன பண்பாடு?
வெள்ளத்தனைய மலர் நீட்டம் மாந்தர்தம் உள்ளத்தனைய உயர்வு - அழகாண அருமையான குறளை படித்திருக்கிறீர்கள்... அதை செயல்படுத்துவதில் ஏன் இத்தனை முரண்பாடு?

உங்கள் தமிழ் எழுத்து வளரட்டும்!
உங்கள் மண ஓட்டம் உயரட்டும்!!

4 comments:

நட்புடன் ஜமால் said...

என்னாச்சி மாம்ஸ் ...

அரசூரான் said...

கொஞ்சம் அலுவலக வேலை ஜமால்... அப்ப அப்ப வந்து சில பதிவுகள மட்டும் படித்தேன்... ஒரே உள்குத்து வெளிகுத்தா இருந்துது. ஒரு புத்தாண்டு வாழ்த்தோட சும்மா ஒரு கோடு போட்டேன்.

க.பாலாசி said...

//பதிவு சந்தனமோ சாணியோ...
சந்தனமெனில் முகறப் பழகு
சாணியெனில் ஒதுங்கப் பழகு//

ரைட்டு...

அரசூரான் said...

வருகைக்கு நன்றி பாலாசி