அஞ்சாவுப்பு புள்ளையோட அறிவாளியா நீங்க?

நீங்கள் ஐந்தாம் வகுப்பு மாணவரை விட அறிவாளியா?

இது ஒரு அமெரிக்க தொலைகாட்சி நிகழ்ச்சி (ஆர் யு ஸ்மார்டர் தன் பிஃப்த் கிரேடர்?), போட்டியிடும் பெரியவர்கள் ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை படிக்கும் குழந்தைகளுடன் மல்லுகட்ட வேண்டும். சரியாக பதில் சொன்னால் பணம் வரும்... இல்லையேல் மானம் போகும்.

மொத்தம் பத்து கேள்வி, பிறகு ஒரு கொசுறு (போனஸ்) சரியாக பதில் சொல்ல சொல்ல $250, $500, $1000 என்று பரிசு பணம் மில்லியனில் போய் நிற்க்கும்.

1-ம் வகுப்பிலிருந்து இரண்டு கேள்வி, 2-லிருந்து இரண்டு என பத்து கேள்விகள். ஒரு சில உதவிகள் உண்டு.

உதாரணத்திற்க்கு சில கேள்விகள்...

1. நட்சத்திர மீன்கள் எப்போதும் ஐந்து கைகளுடந்தான் பிறக்கும் -
சரியா / தவறா?

2. இந்த தொடரில் வரும் அடுத்த எண் என்ன?
1, 2, 6, 42, 1806, ?

3. 'மூஸ்' என்கிற வாத்தையின் பன்மை (ப்லூரல்) என்ன?
அ) மூஸஸ், ஆ) மீஸ்ஸ், இ) மூஸ்

கேள்விய பார்த்தா ரொம்ப சின்ன புள்ள தனமா இருக்கா? நாம்லும் போட்டியில் கலந்து கிட்டா சுலையா... முள்ளங்கி பத்தையா 1 மில்லியன ஆட்டைய போட்ட்டுலாம்ன்னு தோணுதா? பதில் சொன்னா பரிசு... சொல்லாட்டி? தருமி மாதிரிதான் நம் நிலமை... கைபுள்ள கணக்கா எனக்கு இப்பவே கண்ண கட்டுதேன்னு சொல்லிட்டு கழண்டுகிலாம்... ஆனா... கேமராவ பார்த்து "சாமியோவ் நான் அஞ்சாவுப்பு புள்ள மாதிரி அறிவாளி இல்லீங்கோ"-ன்னு சொல்லிட்டுதான் நடைய கட்டனும்.

( 1 மில்லியன் தரேன்னு சொல்லி கூப்பிட்டு நான் தற்குறின்னு நானே சொல்லிக்கினுமா? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்... அதுக்கு நாக்கை பிடிங்கிகிட்டு சாவலாம்)

இதுவரை இருவர் 1 மில்லியன் அமெரிக்க வெள்ளியை பரிசாக வென்றுள்ளனர்.

விடை:
1. தவறு. (இது வரை ஒரு நட்ச்சத்திர மீன் 40 கைகளுடன் பிறந்து உள்ளதாம்)
2. 3263442 (எப்பூடி?)
3. மூஸ்

4 comments:

முத்துலெட்சுமி/muthuletchumi said...

இது ஹிந்தியிலும் வருதுங்க.. அதைப்பாத்துட்டு அதே மாதிரி போர்ட் கேம் மாதிரி வந்துடுச்சு..அதை வாங்கித்தரச் சொல்லி ..எங்களையே உக்காரவச்சி கேள்வி கேட்டு மானத்தை வாங்கறா எங்க பொண்ணு .. :(

நட்புடன் ஜமால் said...

1,3 - நான் சரியான பதிலையே நினைத்தேன்.

1/4 மில்லியன் கிடைக்குமா :P

அரசூரான் said...

வாங்கி கொடுங்க முத்து, புள்ளைங்க படிப்புதான் நம் சொத்து. பொண்ணுதான மானத்த வாங்குறா... கொஞ்சம் விலைய குறைச்சி கொடுங்க...:)

ஜமால், இது சும்மா 10 கேள்விக்கு பதில் சொல்லனும், தயார் பண்ணுங்க, சிங்கப்பூரிலும் இந்த நிகழ்ச்சி வரலாம்

Thekkikattan|தெகா said...

நீங்க ஆல்ஃபெரட்டாவா, நான் அட்லாண்டா? :-)