லாபம் நமக்கு மட்டுமே...

இலங்கையில் 11 வருசத்திற்க்கு பிறகு கிரிகெட்டு விளையாடி இலங்கை அணிக்கு நெத்தியில் திரு நாமத்தை போட்டுட்டு வந்திருக்காங்க நம்ம பசங்க.


அதுக்கு காரணம் யாரு? தோணி-யா? இல்லவே இல்லை... அங்கே அவன் உருவில் விளையாடிய பாணி.. நம் முருகன் தண்ட-பாணி.


சச்சின் எப்படி சதம் அடிச்சான்? எம்பெருமான் முருகன், தண்ட-பாணி கேப்டன் தோணி-யா மாறி சொன்னார்... சச்சின்... இலங்கை ஆட்டக்காரன் வீசுரது எல்லாம் பந்தே அல்ல அது பழனிமலை லட்டு... நீ அதை உன் இஸ்டத்துக்கு தட்டுன்னு.


லாபம் நமக்கு மட்டுமே... திருமுருக கிருபானந்த வாரியார் அருளியது...

பால் கறக்கும் மாடு நம்முடையதாக இருந்தாலும், கன்றுக்குட்டியை அருகில் கொண்டுபோனால் தான் பசு பால் கொடுக்கும். அதுபோல, அடியார்களின் துணையோடு போனால் ஆண்டவனின் அருளை எளிதாகப் பெற முடியும்.

அரசு ஒழிக என்று கோஷம் போடும் கைதிகளை சிறையில் அடைத்தாலும் அவர்களுக்கு உணவு போட வேண்டியது அரசனின் கடமையே. அதுபோல கடவுள் இல்லவே இல்லை என்று நாத்திகம் பேசுபவரையும் கடவுள் காப்பாற்றவே செய்கிறார்.

சத்தியத்தைப் பேசுதல், தர்மத்தை அனுசரித்தல், தாய்தந்தையரைப் போற்றுதல், தெய்வ வழிபாடு செய்தல் இவை எல்லாம் ஒவ்வொரு மனிதனும் செய்ய வேண்டிய அடிப்படை செயல்களாகும்.

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.

கடவுளை வணங்காவிட்டால் நம்மை தண்டிப்பதில்லை. வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை.

4 comments:

நட்புடன் ஜமால் said...

வணங்கினால் நமக்குத் தான் நன்மையே தவிர, அவருக்கு எந்த நன்மையுமில்லை. ஆற்றில் குளித்தால் நம் உடல் தான் தூய்மை பெறும். இதில் ஆற்றுக்கு எந்த லாபமும் இல்லை. ]]

மிக அருமை.

தேவன் மாயம் said...

சோதனைகள் நம்மை வருத்தும்போது, அறியாமையினால் "ஆண்டவனே! உனக்கு கண்ணில்லையா' என்று கதறுகின்றோம். ஆனால், கடவுள் நமக்குப் புரிவது எப்போதும் அருள் மட்டும் தான்.///

உண்மைதான் நண்பரே!

பழமைபேசி said...

ஆமுங்...

அரசூரான் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே