எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்...

இதுவும் ஒரு பெஃட்னா-2009 நிகழ்வு குறிப்புதான். இலக்கிய கவியரங்க நாள் அன்று கவிஞர் ஜெய பாஸகரன் சமகால கவிஞர்கள் பற்றி பேசிய போது "அரசியல்வாதி" பற்றி அவர் எழுதிய கவிதை ஒன்றை சொன்னார்...

அவர் சற்று நகைச்சுவையுடன் சொன்னது என்னை மிகவும் கவர்ந்தது... நீங்களும் படித்து மகிழுங்கள்.

இதுவரை
இருபது முறைகளுக்கு மேல் எதிரிகளை
"எச்சரிக்க கடமை பட்டிருக்கிறேன்"
என்றாய்...
சலனமற்றுக் கிடந்த உன்
ஆதரவாளர்கள் முன்னிலையில்.

பலமுறை
"நான் சொல்லிக்கொள்வது என்னவென்றால்"
என்றாய்...
அதை தாண்டி நீ சொன்னது
எதுவுமே விளங்கவில்லை.

அடிக்கடி
"இன்னொன்றையும் குறிப்பிட்டாக வேண்டும்"
என்றாய்...
ஆயினும் ஒன்றை கூட
குறிப்பிட வில்லை.

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.

நன்றி: கவிஞர் ஜெய பாஸ்கரனுக்கு - காதால் கேட்டதை கண்ணால் குறிப்பெழுதி இங்கு இடுக்கையாக இட்டிருக்கிறேன் - தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்

4 comments:

நட்புடன் ஜமால் said...

ஹா ஹா ஹா

நல்ல பகிர்வு ...

பழமைபேசி said...

நன்றிங்க.... சுகமான நாட்கள் அவை! உங்களுக்கும் உங்களைச் சார்ந்த மற்றவர்க்கும் என் நெஞ்சார்ந்த நன்றிகள்!

தேவன் மாயம் said...

கடைசியில்
"இறுதியாக ஒன்றை சொல்லி விடை பெறுகிறேன்"
என்றாய்...
அந்த ஒன்றையாவது
சொல்லிவிட்டு போயிருக்கலாம் நீ.
///

ஹ ஹ!! ஹா!! நல்லாத்தான் சொல்லியிருக்கார்!!

அரசூரான் said...

நண்பர்கள் ஜமால், பழமை & தேவன் மாயம் - வருகைக்கும் பகிர்வுக்கும் நன்றி.