தாங்குமா தமிழகம்?

சமீபத்திய சட்டசபை கூட்டத்தில் தமிழகத்தின் நிதித்துறை அமைச்சர் அன்பழகன் நாம் ரூ.74,456 கோடி கடனில் இருப்பதாகவும், வரும் வருடங்களில் அது இன்னும் அதிகரிக்கும் என்றும் கூறியுள்ளார்.

தங்களது (தி.மு.க) ஆட்சியால் ஒன்றும் அது அதிகரிக்க வில்லை, அதற்க்கு முன் இருந்த ஆட்சியிலிருந்து அது தொடர்வதாக குறிப்பிட்டு உள்ளார். அது 2000-2001 தி.மு.க ஆட்சியில் இருந்தபோது சுமார் 28,000 கோடியாகவும், தொடர்ந்து வந்த அ.தி.மு.க ஆட்சியில் அது சுமார் 57,000 பின்பு 60,000 என்று வளர்ந்து இன்று 75,000 கோடியை தொட்டு நிற்கிறதாம்.

நம் ஆட்சியாளர்களின் குறிகோள் என்ன? தமிழர்களை கடனில் முன்னேற்றுவதா? முந்தைய அட்சியில் இவ்வளவு கடன் இருந்தது அதை நாங்கள் குறைத்துள்ளோம் அல்லது உயராமல் பல நல்ல திட்டங்களை செய்துள்ளோம் என்று இருக்க வேண்டாமா?

தேவையான தொழிலுக்கு / துறைக்கு, நலிந்த மக்கள் வளர்ச்சிக்கு அரசு மானியம் மிக அவசியம். ஆனால் ஓட்டு தேவைக்காக அரசு மானியம் பல இலவச திட்டங்களால் வீணடிக்கப்பட்டு, தமிழர்களின் வீட்டை கொள்ளையடிக்கிறார்கள் நம் ஆட்சியாளர்கள்.

சட்டசபை உறுப்பினர்களுக்கு சென்னையில் வீடாம்... என்ன கொடுமை? அவர்களுக்கு அவர்கள் தொகுதியில் இல்லாத வேலை சென்னையிலா இருக்கிறது? அவர்கள் சட்டசபை கூட்ட நேரத்தில் தங்கிகொள்ளத்தானே பல கோடியில் சமீபத்தில் எம்.எல்.ஏ விடுதி புதுப்பிக்கப் பட்டது?

இலவசத்தாலும், தகுதிக்கு/திறமைக்கு மீறிய சம்பள முறையாலும் இன்று அமெரிக்கா எதிர்கொள்ளும் பொருளாதாரச் சீரழிவு உங்களுக்கு தெரிய வில்லையா?

பட்டு தெரிந்துகொள்பவன் முட்டாள், பட்டு கெட்டவரிடம் இருந்து கற்றுகொள்பவன் அறிவாளி.

அமெரிக்காவின் கட்டமைப்பு அதனை எந்த சீரழிவிலிருந்தும் எழுச்சிகொள்ள செய்துவிடும். தமிழகம் தாங்குமா?

4 comments:

பழமைபேசி said...

வருத்தமாத்தான் இருக்கு...

கிரி said...

கோபம் அடைவதை தவிர ஒன்றும் செய்ய முடியவில்லை

நட்புடன் ஜமால் said...

இந்த காலகட்டத்தில்

இவங்களுடைய சொத்துகள் எவ்வளவு இருந்தன இப்போது எப்படி வளர்ச்சியடைந்துள்ளன அப்படின்னு நமக்கு தெரிஞ்சாலே --- ஏன் இம்பூட்டு கடன்னு நமக்கு தெரிஞ்சிடும் ...

அரசூரான் said...

வருகைக்கு நன்றி நண்பர்களே.

வருத்தமோ, கோபமோ இல்லை
இது ஒரு பெரும் பகல் கொள்ளை.