அன்பர்கள் தினப் பெயர்ச்சியா?

ஆத்தா... தாயே பராசக்தி, உன் கோவிலில் சனிப் பெயர்ச்சி பூசை பார்த்திருக்கிறேன், குருப்பெயச்சி பூசை கூட பார்த்திருக்கேன். இது என்ன அன்பர்தினப் பெயர்ச்சியா? இந்த பூசை விளம்பரத்தை பார்த்தவுடன் எனக்கு பேர் அதிர்ச்சி!

ஆத்தா... கலியுகம் ஆத்தா கலியுகம். இன்னும் உன்னை வைத்து என்ன என்ன பூசையெல்லாம் பண்ண போகிறார்களோ தெரியலயே? அவ்வ்வ்வ்.


பின் குறிப்பு: இது எவர் மனதையும் வருந்த வைக்க அல்ல... இக்கோவிலுக்கு ஒன்றரை ஆண்டுகள் தொடந்து சென்றவன், கோவில் வலைப்பக்கத்தில் இதைக் கண்டேன்... என் மன வருத்தத்தை பதிவு செய்யவே.

3 comments:

அப்பாதுரை said...

எங்கே இது?!
தப்பா நினைக்காதீங்க.. இப்படி சிரிச்சு வருசக்கணக்காச்சு.. முடியலே.

geethasmbsvm6 said...

வருத்தமா இருக்கு. என்ன செய்ய! :((((((

இராஜராஜேஸ்வரி said...

அன்பர் தினப் பெயர்ச்சியா ..
புதிய மனப் பெயர்ச்சியாக இருக்கிறதே !