ஐ.பி.எல்லே…

இந்தியனுக்கு பெருமை சேர்த்த விளையாட்டு கிரிகெட்டு!
இன்று புக்கிங்கால் ஆயிடுச்சி தரங்கெட்டு, தரிகெட்டு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிராடு லீகா?

ஆட்டக்காரன் ஆட்டத்தை குறைத்து மைதானத்தில் பணம் பேசி ஆடுகிறான்!
ஆட்டக்காரி ஆடையை குறைத்து மைதானத்தில் மனம் கூசி ஆடுகிறாள்!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பிளேபாய் லீகா?

சூதில் பணம் சேர்த்து சொத்து சேர்த்தவன் மூன்று பேரு!
அதில் மனம் தோற்று செத்து போனவன் முன்னூறு பேரு!!
ஐ.பி.எல்லே… நீ இந்தியன் பிரிமியர் லீகா?
இல்லை… நீ இந்தியன் பித்தலாட்ட லீகா?

மூன்று பேரும்…
ஒத்துக்கிட்டா தூக்கி மத்திய-சிறையில போடு!
இல்லாவிட்டா துரத்தி என்-கவுண்டர்ல போடு!!

3 comments:

அப்பாதுரை said...

ஏமாற்றப்பட்டது புரியுது.. ஆனா குற்றம் புரியலியே? இதனால பொதுமக்களுக்கு என்ன நஷ்டம்?
தும்பைவிட்டு வாலைப் பிடிக்கிறோமோ? இந்திய ஊழல் கடலில் இது வெறும் நுரையில்லையா?

அரசூரான் said...

பொது மக்களுக்கு நேரடி நஷ்டம் இல்லை, மறைமுகமாக நிறைய நஷ்டம் என்று நினைக்கிறேன். உதாரணத்திற்க்கு இந்த உதவாக் கரைகளை ஆதர்ஸ புருஷர்களாக நினைக்கும் குழந்தைகள்

அரசூரான் said...

அரசியல் ஊழல்களை ஒப்பிட்டோம்னா இதெல்லாம் கடலில் கரைத்த உப்பே!