பயணங்கள் முடிவதில்லை...

ஒரு எந்திரத் தாயின் இறுதிப் பயணம். அவள் இதுவரை தான் விண்ணுக்குச் சுமந்து சென்றர்வர்கள் அனைவரையும் மீண்டும் பத்திரமாக மீண்டும் வீடு கொண்டுவந்து சேர்த்திருக்கிறாள்.

1984-ல் கரு பெற்றால் உரு பெற்றால், அன்றுமுதல் இன்று வரை பல விண்வெளி தகவல் திரட்டு, ஆராச்சி மற்றும் சர்வதேச விண்வெளி மேடை அமைப்பு பணிகளை செவ்வனே செய்திருப்பவள்... அவள் பெயர் டிஸ்கவரி (விண்வெளி ஊர்தி).

இது நாள் வரை அவள் கொண்ட பயணம் முப்பத்தி எட்டு, பயணப் பட்ட தொலைவு மில்லியனில்... 142,917,535 மைல்கள் ( 230,003,477 கிலோ மீட்டர்). விண்ணில் வாழ்ந்த நாட்கள் 351, சுமந்து சென்ற விண்வெளி அறிவியலர் 246 பேர்.

நாஸாவில் இவளைப்போல் மூன்று பேர் இருந்தாலும் இவளே முதுமையானவள், பயணம் என்றால் பயப்படாமல் பெட்டி படுக்கைகளை தயார் செய்பவள். இன்று இன்னும் சில மணி நேரங்களில் அவளின் கடைசி விண்வெளிப் பயணம் தொடங்க போகிறாள்... அவளின் இப்பயணமும் முந்தைய பயணங்கள் போல் வெற்றியடையா வாழ்த்துகிறேன்.

இன்று அவள் செல்லப் போகும் பயணம் வேண்டுமானால் இறுதியாக இருக்கலாம், ஆனால் அவளுடைய பயணங்களும் அதன் பயன்பாடுகளும் விண்வெளி ஆராச்சியிலும், சாதனையாக அருங்காட்சியகத்திலும் தொடரப்போகின்றன... டிஸ்கவரியின் பயணங்கள் முடிவதில்லை.

முதல் 10 நிமிடப் பயணம்...

பொறுப்பி: 39-வது பயணத்திற்க்குப் பிறகு டிஸ்கவரியை நீங்கள் ஸ்மித்ஸோனியன் இன்ஸ்டிடியூட்-ல் உட்வர் கேஸி மையத்தில் பார்க்கலம்.

6 comments:

அரசூரான் said...

The orbiter and its crew of six astronauts are scheduled to lift off from the Kennedy Space Center in Florida at 4:50 p.m. local time – with a packed cargo bay.

The ship is carrying an Italian-built cargo carrier re-engineered to provide extra storage space on the International Space Station. In addition, the orbiter is lofting some 5 tons of supplies and Robonaut 2, which designers envision as an eventual humanoid helpmate for future space-station crews.

Discovery's launch marks the first of three curtain calls – one for each of the remaining vessels in the shuttle fleet – as NASA's human spaceflight program enters a period of profound transition.

- Quick update about her 39th flight.

Chitra said...

ஆஹா... நல்ல தகவல் தொகுப்பு.... வாஷிங்டன் ஒரு ட்ரிப் அடிச்சிற வேண்டியதுதான். :-)

அரசூரான் said...

நன்றி சித்ரா... வாஷிங்டனோட நிக்காம அடுத்த கட்டத்துக்கு கொண்டுபோக விஞ்ஞானிகள் தயார். மார்ஸுக்கு போக ரெண்டு டிக்கட் இருக்காம்...வசதி எப்புடி?

பழமைபேசி said...

நன்றிங்க இராசா...நல்ல தகவல்!!

VELU.G said...

நல்ல தகவல்

அரசூரான் said...

@பழமை & @வேலு...
வருகைக்கும் பின்னூட்டத்திற்கு நன்றி