பாத்திரமறிந்து பிச்சையிடு...

பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி
புது மொழிய விட்டுடுவோம், போடுறது மொக்கை அதை படிச்சி பார்த்து போடுனுமான்னு நீங்க கேட்க்க வேணாம், பதிவரே கேட்டுக்குவாங்க.
பீ கேர்புஃல்... நான் என்ன சொன்னேன்.
முது மொழிய பார்ப்போம், வாசலில் வந்து யாசகம் கேட்பவர் எல்லோரும் பிச்சைக்காறாரர் அல்ல அவர்களில் சிலர் சிவ/வைணவ அடியார்களாகவும் இருப்பார்கள், அவர்களில் சிலர் பழவகைகளை மட்டுமே பெற்றுகொள்வார்கள். அதனால் வந்திருப்பவரின் கையில் திருஓடு இருக்கிறதா இல்லை வேறு பாத்திரம் உள்ளதா என்பதறிந்து உணவிட வேண்டும் என்பதற்க்காக சொல்லப்பட்ட முது மொழி.
ராப்பிச்சை... வழக்கம் போலதான், எது போட்டாலும் வாங்கி கொண்ட காலம் போய், சூடா ஏதாவது போடுங்கன்னு கேட்டாங்க, அது இப்ப கொஞ்சம் சூடு பிடிச்சி... சூடா இல்லாட்டி பரவா இல்லை பணமா குடுங்க நல்ல கடையா பார்த்து நானே வாங்கி கொள்கிறேன் என்று சொல்லும் வரை வந்துவிட்டது.
காதல்பிச்சை... இப்ப காத-ல்/லில் பிச்சை எடுக்கிற ஸ்டைல்/டிரெண்டு ரொம்ப மாறிடுச்சி. கடற்க்கரையில் காதலி பாத்திரமே இல்லாமல் என்னங்க(!!!) என்றால் போதும் கையில் சுண்டலோ, பொறியோ, ஏதோ ஒன்று கிடைத்து விடுகிறது. பதிலுக்கு காதலன் கண்ணத்தை காட்டுகிறான்... கிடைத்தது முத்தப் பிச்சை.

4 comments:

பழமைபேசி said...

இஃகி

Anonymous said...

//பாத்திரமறிந்து பிச்சையிடு... முதுமொழி
பதிவபடிச்சி பின்னூட்டமிடு... இது புதுமொழி//

அப்ப பதிவு படிக்காம மீத பர்ஸ்டு போடக்கூடாதா :)

நட்புடன் ஜமால் said...

நான் மெய்யாலுமே படிச்சிட்டேனே

இப்ப பின்னூட்டலாமா ...

அரசூரான் said...

வருகைக்கு நன்றி அன்பர்களே.

சி.அ... உங்கள் கேள்விக்கு ஆம் இல்லை என பதில் சொன்னால் வரும் தொல்லை. உங்களுக்கு எது மகிழ்ச்சி அளிக்கிறதோ அதை செய்யுங்கள். ஆனால் நான் அவன் இல்லை... மீ த லாஸ்ட்