எங்கே இருக்கிறேன் நான்...

இன்று நான் ஒரு கணம் என்னையே வியந்து கொண்டபொழுது, என் மனதில் எழுந்த கேள்விதான்... எங்கே இருக்கிறேன் நான்?

தமிழகமோ இல்லை புலம் பெயர்ந்த அகமோ, வேலை வேலை... எல்லோருக்கும் வேலை என்று ஆளாய் பறந்துகொண்டிருக்கும் நாட்களில், நாடு எந்த நாடாய் இருந்தால் என்ன? நம் மண்ணும் நம் பழக்க வழக்கமும்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கம் என்பதை மிக அழகாக உணர்த்தினார் என் நண்பர்.

ஓர் மாலை நேர சந்திப்பிற்க்காக அழைந்திருந்தேன், வந்தார் முகத்தில் முத்தான சிரிப்புடனும் முக்கனிகளுடனும்... இல்லை நான்கு கனிகளுடன்... ஒரு சகோதரியின் வீட்டுக்கு சீர்வரிசை செய்யப்போகும் சகோதரனாய்.

அவர் கொண்டுவந்தது அப்படியே...


வீட்டிற்க்கு வரும் நண்பர்களை நா(ன்)ம் எப்போதும் வீட்டில் இருந்து “பை” சொல்லுவதில்லை. வாசல் வந்து வழியனுப்புவோம். எப்போதும் என் மகள் கேட்பாள் ஏனப்பா இங்கிருந்தே சொல்லக்கூடாதா என்று... இன்று அவளும் என்னோடு வாசல் வந்து “பை” சொன்னால் நண்பர்களுக்கு.

நன்றி நண்பரே.

6 comments:

Chitra said...

குறிப்பு எடுத்துக்கிறேன்.... அடுத்த முறை வரும் போது, வீட்டுக்கு வந்து தட்டு வைக்கணுமே... ஹி,ஹி,ஹி,ஹி....

அரசூரான் said...

நன்றி சகோதரி, பல நூறு மைல்கள் பயணித்து, பரபரப்பான அலுவல்களுக்கு இடையில் எங்கள் அழைப்பை ஏற்று, ஒரு மணி நேரம் குடும்பத்துடன் பேசி மகிழலாம் என்று ஆல்ஃபரட்டா வந்து பெருமை படுத்தியவர் நீங்கள்.

நாம் ஒவ்வொருவரும் விருந்தோம்பலில் சிறந்தவர்களே, அதில் ஒரு ஈடுபாட்டுடன் செய்வது, அதை நம் பாரம்பறிய முறையில் செய்வது... இவையெல்லாம் நாம் நம் சந்ததியினருக்கு விட்டுச்செல்லும் ஒரு நல்ல பழக்கம். அதை குறிப்புணர்த்தவே இப்பதிவு.

உங்கள் வருகைக்கு நன்றி.

நட்புடன் ஜமால் said...

நம் மண்ணும் நம் பழக்க வழக்கமும்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கம் என்பதை மிக அழகாக உணர்த்தினார் என் நண்பர்.

nice ...

பழமைபேசி said...

குறிப்பு எடுத்துட்டேனுங்க

அரசூரான் said...

@ஜமால், @பழமை - வருகைக்கு நன்றி.

InternetOnlineJobHelp said...

No 1 Free Indian Classified Site உங்களது பதிவுகள் அனைத்தும் படிக்க சுவராஷ்யமாய் இருக்கின்றன... என் பக்கம் பார்க்க Free Classified New Website . Just Post Your Post Get Free Traffic ....http://www.classiindia.com ... நீங்களும் படித்திட்டு சொல்லுங்கள் www.classiindia.com ... உங்கள் பதிவுகளுக்காக காத்திருக்கிறேன் ... :)
நன்றி