3 + 5 + 6 + 7 = 19

என்ன ஏதோ புதுசா (தப்பு) கணக்கு சொல்லிகொடுக்கப் போரேன்னு நினைச்சிங்களா? இல்லை... நான் அவன் இல்லை.

தலைப்பில் உள்ளது எல்லாம் ஜப்பான் நாட்டில், வாகன (கார்) உற்பத்தியில் முதன்மை நிறுவனமான, மிகத்திறன் வாய்ந்த, தரத்திற்க்கு பெயர்பெற்ற டொயோட்டா நிறுவனத்தின் இன்றைய அமெரிக்க கணக்கு.

உற்பத்தி துறையில் ஜப்பானியர் எட்டிய உயரம் மிகப் பெரியது... காரணம் தரக்கட்டுப்பாடு. அதை அடைய அவர்கள் பயன்படுத்திய வாய்ப்பாடு 3எம், 5எஸ், 6சிக்மா, 7டபியு எனப்படும் உற்பத்தி திறன் தரக்கோட்பாடுகள்.

உண்மைதான், சென்ற வாரம் வரை அமெரிக்காவில் விற்க்கப்பட்ட டொயோட்டா வாகனங்களில் 80% சதவிகித வாகனகள் இன்னும் சாலையில் ஓடிக்கொண்டிருக்கின்றன என்ற பெருமையோடு.

இன்று, எங்கோ ஏற்ப்பட்ட ஒரு சிறு தவறு 19 உயிர்களை பலிகொண்டுவிட காரணமாகிவிட்டது. காரணம் கண்டுபிடிக்கப்பட்டு (விசையுந்து பலகை) அதை சரிசெய்து கொடுக்க ஆவணம் செய்யப்பட்டும், அமெரிக்க வாகன சந்தையில் முதன்மை நிலமையை இழக்கும் தருவாயில் நிலமை உள்ளது.

3 + 5 + 6 + 7 = 19? இப்போதைக்கு கணக்க சரி பண்ண ஒரேவழிதான். டொயோட்டாவுக்கு (20)10-ல 7 1/2 (ஏழரை) = 19

மொழி படத்துல பிரகாஷ்ராஜ் சொல்லுவாரே... தாத்தா தினம் வெள்ள பூண்டு சாப்பிட்டு திடமா இருந்தார். ஒரு நால் மழைல நனைந்து ஒரு தும்மல் போட்டார், பொட்டுன்னு போயிட்டார். அவர அந்த வெள்ளப்பூண்டால் கூட காப்பாத்த முடியலன்னு. டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.

என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு,

3 comments:

க.பாலாசி said...

//டொயோட்டாவுக்கு இன்று அதே நிலமை... கெய்ஸானால கூட காப்பாத்த முடியல.//

அப்படியா??

//என்ன செய்யமுடியும் 3,5,6,7 எல்லாத்தையும் விட ஏழரை பெரியதால்ல இருக்கு//

ஆமங்க...

நல்ல இடுகை...

நட்புடன் ஜமால் said...

7 1/2 தான் மாம்ஸ் எங்கும் ...

அரசூரான் said...

நன்றி பாலாசி & ஜமால்.

ஜமால், சிங்கைல ஏழரை இல்ல, அங்க பதிமூனுலா... என்னலா மாத்தி சொல்லுரீங்க... :)