கடலையா இல்லை பீட்டரா?

பள்ளி/கல்லூரி காளைகள் பேசுவது கடலையாகவும், கன்னிகள் பேசுவது பீட்டராகவும் நாம் கூறுவோம். ஆங்கிலத்தில் இதை பொதுவாக “வோக்கல் ஃபிரை” என்று அழைக்கிறார்கள்.


இந்த “வோக்கல் ஃபிரை” அதிகம் காணப்படுவது பெண்கள் இடத்தில் என்று ”ஜர்னல் ஆஃப் வாய்ஸ்”-ன் சமீபத்திய கணக்கெடுப்பு சொல்லுகிறது. இது ஒரு பக்கம் பேச்சின் புதிய வடிவம்/அமைப்பு (ஃபேஷன்/ஸ்டைல்)-ன்னு சொன்னாலும் இது ஒரு வைகையான பாதிப்பு (ஸ்பீச் டிஸாடர்)-ன்னு மருத்துவகள் சொல்லுகிறார்கள். நான் இது பற்றி “இன்னா பேசுர நீ”-ன்னு ஒரு பதிவிட்டிருந்தேன்.


நாம் பேசும் போது ஒன்னு பம்மி பேசுவோம், இல்லையா உரக்க பேசுவோம் இல்லை வறுப்போம், அதைதான் இப்ப “வோக்கல் ஃபிரை”-ன்னு சொல்லுராங்க. எனக்கு ரொம்ப நாளா சில/பல தமிழ்ப் பெயர்களும் ஆங்கில பெயர்களும் ஒத்து இருப்பதை பார்த்து ஆச்சிரியமாக இருக்கும். உதாரணத்திற்க்கு வானவில் (ரெயின்போ) – தமிழ் ஆங்கிலம் இரண்டிலும் பெயர் வைத்தவர்களுக்கு வில்லின் அமைபை பொதுப்படையாக கையாண்டிருப்பது. இதிலும் வறுத்தலை (ஃபிரை) பொதுப்படையாக இருப்பது.

சரி, வறுத்தலுக்கு அடிப்படை பிரிட்னியோட ஓ பேபி பேபி பாடல், மற்றும் பாப் பாடகிகளோட ஹஸ்கி, முஸ்கி, புஸ்கி பாடகல்தான் காரணமாம்.
ஓ பேபி பேபி கேட்கனும்னா படத்தை கிளிக்குங்க.



உப்புமாக் கவி!

கவிதை எழுதும் நண்பா
தெரியுமா உனக்கு வெண்பா?

கேள்வி கேட்கும் நண்பா
எனக்கு பேசதெரியும் அன்பா!

இலக்கணத்தில்
நேர் நேர் தேமா, நிரை நேர் புளிமா

அரசியலில்
நேரு நேரு மாமா, அமெரிக்க அதிபர் ஒபாமா

கவிதைக்கு அழகு - சீரும் தொடையும்
மதிய உணவுக்கு அழகு - மோரும் வடையும்

கவிதையை மெருகூட்ட - தலையும் யாப்பும்
சிகையை மெருகூட்ட - சோப்பும் சீப்பும்

கவிதை சிறக்க - எதுகையும் மோனையும்
புதுக்கவிதை சிறக்க - ரைமிங்கும் டைமிங்கும்

ஆஹா, புதுக்கவிதையில்
நீ ஓபாமா!

அய்யகோ,
கவிஞன் எனச் சொல்ல என்மனம் ஒப்புமா?
கவிதையில் இது வெறும் உப்புமா!!

தமிழ் இனி மெல்ல வாழும்...

தமிழ்
தமிழ் தமிழென்று தமிழ் அமிழ்தமாய்
தமிழ்மொழி நம் தாய்மொழி எனும் தாரக மந்திரமாய்
தமிழ் தமிழ்நாட்டில் வாழ்ந்த காலம் - இறந்த காலமாய்

இனி
இனிய மொழிகளிலே தமிழ் மொழிபோல்
இனிதானது எங்கும் காணோம் என்று
இன்று இணையத்தில் தமிழ் வாழும் காலம் – நிகழ் காலமாய்

மெல்ல
தமிழ் இனி மெல்லச் சாகும்
எனச் சொன்னவர்களிடம் மெல்லச் சொல்லுங்கள்
புலம்பெயர்ந்த தமிழர்களிடம் தமிழ் – எதிர் காலமாய்

வாழும்
வாழ்வாங்கு வாழ்வது வள்ளுவரின் குறள் மட்டுமல்ல
வாழையடி வாழையாய் நாம் பேசும் தாய்மொழியும் தான் என்று
மெல்ல அல்ல உரக்கச் சொல்லுங்கள்

தமிழ் இனி மெல்ல வாழும் – காலம் காலமாய்.

குறிப்பு: இது நான் அட்லாண்டா தமிழ்ச் சங்கத்தில் நடைபெற்ற விடுமுறை தின கவிதை அரங்கத்திற்க்காக எழுதியது. தமிழ் நாட்டில் தமிழ் இறந்த காலமாய் என குறிப்பிட்டது இன்றைய தமிழ் ஆர்வத்தையும், ஆங்கில மோகத்தையும் காலத்தால் குறிப்பிடவே அன்றி குறைத்து மதிப்பிட அல்ல.

அடி ராக்கம்மா ராக்கு ராக்கு...

இங்கு அமெரிக்காவில் தேங்ஸ்கிவ்விங் விடுமுறை, அதையொட்டிய கொண்டாட்டங்கள் கலைகட்ட தொடங்கிவிட்டன.

அதில் முதலாவதாக நான் இன்றைய செய்தியில் பார்த்து ரசித்தது... உங்களுக்காக.

இங்கே சொடுக்குங்க... சில வினாடி விளம்பரங்களுக்கு பிறகு வரும் ஆடலை கண்டு ரசிங்க.

அம்மாடி என்ன ஒரு நேர்த்தியான படைப்பு.

எனக்கு அவர்கள் பெயரை ”ரேடியோ சிட்டி ராக்கெட்டர்ஸ்” கேட்டவுடனேயே நினைவுக்கு வந்தது சிறுத்தை பட பாடல் அடி ராக்கம்மா ராக்கு ராக்கு... அதான் தலைப்பா ஆயிடுச்சி.

அடி ராக்கம்மா ராக்கு ராக்கு நெஞ்சுக்குள்ள ராக்கெட்டு
தாக்கம்மா தாக்கு தாக்கு ஆட்டத்துல விக்கெட்டு

இந்த ரேடியோ சிட்டி ராக்கம்மா எல்லாம் ஒரு ஐம்பது வருடமாக இப்படி ஆடி பல விக்கெட்ட ”கிக்” பண்ணியிருக்காங்க.

மாதிரிக்கு சில... கீழேயுள்ள இரண்டு தொடுப்பையும் சொடுக்கி பாருங்க.

2010 கிருஸ்துமஸ் அணிவகுப்பு

2008 மேசீஸ் அணிவகுப்பு

சரி... கிக்கு கிக்கா இருந்துச்சா? நாம பாடலை மேற்கொண்டு தொடருவோமா?

எதுக்கும்மா உதைக்க வர? கூட்டமா கூடி வர?
உன் காலல ஏன் காத்துல நீ கவிதை எழுதுர?

என்னையா சொல்ல வர? எப்பவுமே துள்ளுகிற
இல்லாத என் இடுப்ப இப்ப ஏன் கிள்ளவர?

மங்காத்தா அப்ப... மாயவரத்தா(ன்) இப்ப...

மங்காத்தா சென்ஸேசனல் ஹிட்டா இருக்கலாம், ஆனா நம்ம மாயவரத்தா(ன்) சீஸனல் ஹிட்டு... அப்ப இல்ல இப்பவும்தான்.

யூ ட்யூப்ல பார்த்தேன்... நீங்களும் பார்த்து ரசிங்க...

இங்க சொடுக்குங்க...

மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...

மறந்தே போச்சி... ரொம்ப நாள் ஆச்சி...
நான் பதிவு போட்டு-ன்னு சொல்ல வந்தேன், அதுவே தலைப்பாகி விட்டது.

மூன்று மாத காலமாக, அலுவல், தமிழ்க் கல்விப் பணி, எங்கள் (அட்லாண்டா) தமிழ்ச் சங்கப் பணி, இந்தியப் பயணம் பிறகு வட அமெரிக்கத் தமிழ்ச் சங்கப் பேரவை பணி என்று நாட்கள் ஓடிவிட்டது.

சரி நாட்டுல என்ன நடக்குதுன்னு பார்த்தா... திருந்தாத முன்னேற்றக் கழகம் திஹார் முன்னேற்ற கழகமா மாறிவிட்டது போல இருக்கு. மேற்கொண்டு செய்திகள வாசிச்சா ஒரு அருமையான நகைச்சுவை விருந்த நமது எஸ்.ஏ.சி சொல்லியிருக்காரு... தகவல் என்னன்னு பெட்டிச் செய்திய பாருங்க.இவரு (எஸ்.ஏ.சி) முன்னின்று வழி நடத்துவாராம், (இளைய) தளபதி (விஜய்) கேடயமா நமக்கு பின்னாடி இருப்பாராம். எனக்குத் தெரிந்த வரை தளபதின்னா முன்னின்று போரிடுபவர், கேடயம்னா நெஞ்சுக்கு முன்னாடி ஏந்தி நம்மை எதிரியிடம் இருந்து காத்துக்கொள்ள. இவரு பின்னாடி கேடயமா இருந்து நமக்கு யாரும் ஆப்பு அடிக்காம காப்பாத்துவாரா?

எனக்கு ஒன்னும் புரியல, உங்களுக்கு ஏதாவது புரியுதா?

செல்வி செயலலிதாவோட ஆப்பு அடிக்கிற விதமே தனி, எஸ்.ஏ.சி-க்கு அவசியம் பின்னாடி கேடயம் தேவை என்கிறதைதான் இப்படி சொல்கிறாரோ? அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்.

எங்கே இருக்கிறேன் நான்...

இன்று நான் ஒரு கணம் என்னையே வியந்து கொண்டபொழுது, என் மனதில் எழுந்த கேள்விதான்... எங்கே இருக்கிறேன் நான்?

தமிழகமோ இல்லை புலம் பெயர்ந்த அகமோ, வேலை வேலை... எல்லோருக்கும் வேலை என்று ஆளாய் பறந்துகொண்டிருக்கும் நாட்களில், நாடு எந்த நாடாய் இருந்தால் என்ன? நம் மண்ணும் நம் பழக்க வழக்கமும்தான் நாம் நம் பிள்ளைகளுக்கு கற்றுக்கொடுக்கும் பழக்கம் என்பதை மிக அழகாக உணர்த்தினார் என் நண்பர்.

ஓர் மாலை நேர சந்திப்பிற்க்காக அழைந்திருந்தேன், வந்தார் முகத்தில் முத்தான சிரிப்புடனும் முக்கனிகளுடனும்... இல்லை நான்கு கனிகளுடன்... ஒரு சகோதரியின் வீட்டுக்கு சீர்வரிசை செய்யப்போகும் சகோதரனாய்.

அவர் கொண்டுவந்தது அப்படியே...


வீட்டிற்க்கு வரும் நண்பர்களை நா(ன்)ம் எப்போதும் வீட்டில் இருந்து “பை” சொல்லுவதில்லை. வாசல் வந்து வழியனுப்புவோம். எப்போதும் என் மகள் கேட்பாள் ஏனப்பா இங்கிருந்தே சொல்லக்கூடாதா என்று... இன்று அவளும் என்னோடு வாசல் வந்து “பை” சொன்னால் நண்பர்களுக்கு.

நன்றி நண்பரே.