கல்லூரி கானா...

கல்லூரி கானா...

வகுப்புல யென் பேரு கிட்டு
கிட்ட சுத்தி நிறைய சிட்டு
அதுல பல பேரு அட்டு, சில பேரு லட்டு

மாலாதான் யென்னோட பிட்டு
மயக்கத்துல ஊ..ல..லா..லா பாட்டு
மார்க்குல ஓ..ல..லா..லா கோட்டு

கையில கொடுத்தா ஒரு சீட்டு
அமெரிக்காவுக்கு விட போரா ஜூட்டு
நான் இப்ப வெத்து வேட்டு.

(கீழே உள்ள வரிகள் தனி நபர் தனிக்கைக்கு உட்பட்டது...U/A சர்டிஃபைடு)
பச்சை

அவள்... பக்கதுல பாக்கி(யம்/ஸ்தானி) பச்சை
கண்ணுல காமிக்குரா இச்சை
மார்புல கட்டியிருக்கா கச்சை
கண்கள் கேட்காது என் பேச்சை
நிறுத்த போகுது என் மூச்சை
கயட்டி போடுவாலா பிச்சை?

ஹி...ஹி..துவைத்து போடத்தான்.

சிரிக்காதே...

சிரிக்காதே...
சிரித்தால் உன் கண்ணத்தில் குழி...
என் மனம் தடுக்கி விழுந்து விட போகிறது

கண்களைத் திற...
அந்த ஒளியில் தான் நான்
உன் இதழ் என்ற இருவரி கவிதையை படிக்க முடிகிறது.

மௌனத்தை கைவிடு...மரணம் நிகழ்ந்துவிட போகிறது

உன் கயல் விழியால் ஒரு கடைகண் பார்வை...
கண்ணக் குழியோடு ஒரு கள்ளமில்லா சிரிப்பு...
காற்றுக்கும் வலிக்காமல் ஒரு கையசைவு...
ஒன்றே... ஒன்று மட்டும்... என் உயிர் பிழைக்க.

பெண்ணே நீ ஒரு மாயம்...

முகத்தில் எப்பொழுதும் முக-சாயம்
ஆடை அணிவதில் சிக்கனம் அணி-யாயம்
இவற்றால் என் மனதில் பெரும் காயம்
காயத்திற்க்கு மருந்தாக...
நீ என் கூட விளையாட வறியா தாயம்?

நானும் மாயவரம்- தாங்கோ

ஹேய்...யாருடா நீ பருப்பு?
மனசுல என்னா நெனப்பு?
மும்தாஜ் இடுப்பாடா அடுப்பு?
மத்தத பாத்தியா என்ன எடுப்பு?
நீ ஏத்தாத எனக்கு வெறுப்பு
"வீரா"வுக்கு வந்துடும் கடுப்பு.

செட்டு போட்டு எடுத்தா தான் அது படம்
பிட்டு போட்டு(அடிச்சி) பாஸ் பண்ணுனா அது பாடம்
சாமியாரு இருந்தா அது மடம்
மாமியாரு இருந்தா அது மாடம்
அடுக்கு மொழி பேசுனா அது டி.யா.ரு
என்ன கேக்க நீ யாரு?


ஆட்டோ ஷோ... (மிச்சிகனில்)

நான் பார்க்க போனேன் காடி
சுத்தி பார்த்தேன் தேடி
ரொம்ப புடிச்சது ஆடி
காரணம் அதோட பாடி
விலைய பார்த்தா...ஆத்தாடி
வீட்டுக்கு வந்துட்டேன்... ஓட்டமாய் ஓடி

தண்டனை...

கனவு கை கூடவில்லை - என் பெற்றோருக்கு,
காதலியுடன் என் கல்யாணம்

கால் காசு செலவில்லை - என் பெற்றோருக்கு,
காலையில் பதிவு திருமணம்

காலில் விழுந்து ஆசிபெற வழியில்லை - எங்களுக்கு,
காலம் கணிந்துவர காத்திருக்கிறோம்.

மல்லு கட்டு

'ஜல்லி கட்டு'... நக்கலுக்காக அது ஆயிடுச்சி 'மல்லு கட்டு'.

(அறிவிப்பாளர்: இந்த வருட மல்லு கட்டு நிகழ்ச்சியை நமது 'பட்டி மன்ற பாவலர்' அய்யா...சாலமன் பாப்பைய்யா தொகுத்து வழங்குவார்)

அனைவருக்கும் வணக்கம். ஒரு திரு நாளு... பண்டிகை அப்படீன்னா கொண்டட்டம் இருக்கனும்யா... அப்பதானா மனசு குதூகலமா இருக்கும். உண்மைய சொல்லனும்னா... இங்க 'ஜல்லி கட்டா' / 'மல்லு கட்டா'-னு ஒரு பட்டி மன்றம் நடத்துலாம்யா... இல்லியா பின்ன... அங்க பாருங்க... ஒரு பக்கம் கொம்பு சீவி, பல பல-னு வண்ணம் பூசி... சும்ம ஜில்..ஜில்-னு முரண்டு புடிச்சி நிக்கிற காளைங்க... மறு பக்கம் அந்த ஜல்லி கட்டு காளைய 'மல்லி மொட்டு'-னு நினைச்சி அடக்க துடிக்கிர வாலிப காளைங்க... திறந்து விடுங்கய்யா...காளைங்கல மோதி பாத்திறட்டும்.

தோ...திறந்து விட்டச்சய்யா முதல் காளைய... ஆங்க்... ஆகாங்க்... அருமைய்யா... தலைய ஆட்டுது, தரைய பிராண்டுது... முட்டப் போவுதா இல்ல முனகப் போவுதான்னு பாப்போம்.

அடடா... அம்புட்டு பேரும் கிளம்பிட்டாங்கய்யா காளைய அடக்க... பள்ளிக்கூடத்துல ஒரு வாத்தியார் பல காளைங்கள அடக்குவார்... அங்கிட்டும் இங்கிட்டும் ஓடி... இங்க ஒரு காளைய பல காளைங்க துரத்துது. ஓ... ஓய்... சும்மா சொல்லப்பிடாதுய்யா காளை அது வேளைய ஆரம்பிச்சிடுச்சி... சும்மாவா... அலங்காநல்லூர்ல... நம்ம பசங்கள ரவுண்டு கட்டுது.

ஓரு பயபுள்ள ஆர்வ கோளாருல காள வால புடிக்குது... நம்ம காள ஒரு யு டேர்ன் அடிக்குது. வால புடிச்ச புள்ள இப்ப காளையோட கால்ல... அவனுக்கு இந்த 'மல்லு கட்டு' இனி 'மண்ட கட்டு' தான்.

இதோ வந்துட்டாரு ஒரு மதுரகார தம்பி துள்ளிகிட்டு... தலையில முண்டாசு கட்டு (ஏதாவது 'பாபா' கட்டா இருக்குமோ)... பார்வையில ஒரு தெணாவெட்டு... இருக்காத பின்ன... அது மதுர மண்ணோட பிறந்தது ஆச்சே... அவரு காளைய பாக்க... காளை அவுர நோக்க... காளைகிட்ட கண்ணாலயே சொல்லுறாரு... மதுரக்காரன் அடக்கிடுவோம்ல...

அதான் சொன்னோம்ல... மதுரக்காரன் யா... காள இப்ப கதருதுல்ல... இதுக்கு மேல கமெண்டரி எதுக்கு... கிளம்புங்கய்யா வீட்டுக்கு போவோம்.

அறிவியல் முன்னேற்றம்...50/50

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கம் போல, ஒரு நிகழ்வுன்னா நல்லது கெட்டது இரண்டும் நடப்பது போல...(ரொம்ப பில்டப் பண்ணுரனோ?) அறிவியல் முன்னேற்றமும் "ஆக்கப்பாதை" "அழிவுப்பாதை"-னு 50/50-யா இருக்கு.

ஆக்கப்பாதை பற்றி நான் ஒன்னும் புதுசா சொல்ல தேவை இல்லை இங்கே. அழிவுப்பாதைய பற்றி கொஞ்சம் அலசலாம். அடடா இவன் ஏதோ குண்டு வைக்கப் போரத பத்தியோ இல்ல இனையதளங்களால் தடுமாறிப்போகும் தற்குறிகளை பற்றியோ சொல்லப் போரான்னு நினைக்காதீங்க... இது ஆக்கப்பாதையில் உள்ள அழிவுப்பாதை பற்றியது (அங்க பில்டப் பண்ணுனேன்... இங்க பினாத்துரேனோ?). சரி புரியர மாதிரி சொல்லுரேன்... குறை-யில் குறை-யை காணாமல், நிறை-யில் குறை-ய பத்தி பார்ப்போம்.

ஒரு சராசரி மனிதனை நினைவில் வைத்து சில விசயங்களை அலசுவோம்...

1. நினைவாற்றல் - குறைய காரணமாகிறது

கால்குலேட்டர கையாலுவதே ஒரு திறமை, அத வச்சு சைன்/காஸ் தீட்டா இல்ல ஒரு பெரிய எண்ணோட மடங்கு/மூலம் இதெல்லம் அதிவேகமா போட பயன் படுத்த ஆரம்பிச்சோம்... இப்ப 5-யும், 9-யும் கூட்ட கால்குலேட்டர் எங்கன்னு தேடுராங்க. சரி இத விடுங்க சிலபேர் கணக்குன்னாலே கடுப்பாய்டுவீங்க. இந்த டெலிஃபோன் சமாச்சாரத்த பார்ப்போம்... என்னமோ டிஜிடல் டயரியாம்... பர்சனல் ஆர்கனைசராம்... அப்போல்லாம் 5 இல்ல 15 நம்பர பட படன்னு சொல்லுவோம்... இப்ப? அய்யோ நம் நம்பர் நமக்கே தெரியாது... என்ன ஒரு சாமர்த்தியம் நமக்கு... நம்பர் கேட்கும் நண்பரிடம் சொன்னத கொஞ்சம் யோசிச்சு பாருங்க... " நீங்க ஒங்க நம்பர சொல்லுங்க... அப்படியே என் செல்லு ஏத்திகிட்டு... அப்படியே ஒங்களுக்கு ஒரு மிஸ்டு கால் விடுரேன்... நீங்க அத அப்படியே ஸ்டோர் பண்ணிக்கலாம்" (ஹும் அவரே இதுக்கு-தான உங்க நம்பர கேட்டாரு). நான் யாரையும் குத்தம் சொல்ல விரும்புல... அடிக்கடி பிளான் மாறுது இல்ல புரொவைடர மாத்துரோம்... இதையே அடுத்தவங்களும் செய்ய... இப்ப நிலமை? "யாரு சிம்முல யாரு"-ன்னு ஒரு நிகழ்ச்சியே நடத்துலாம் போல இருக்கு.

2. சோம்பேரிதனம் - அதிகரிக்க காரணமாகிறது

என்ன கொடுமையா இருக்கு... எதுக்கெடுத்தாலும் கால்கடுக்க நிக்க வேண்டியிருக்கு... ஈ.பி பில்லுக்கு, டெலிஃபோன் பில்லுக்கு, பஸ்/ரயில்/விமானம் பயண முன்பதிவு செய்ய... அப்பாடா... வந்தாச்சு டெலி பேமெண்ட், டெலி புக்கிங்க், ஆன்-லைன் பேமெண்ட், ஆன்-லைன் புக்கிங்க... உங்களது அனைத்து தேவைகளும் உங்கள விரல் நுனியில்... சுழற்றுங்கள் அல்லது சொடுக்குங்கள்(கிளிக்குனுமாம்) நீங்கள் உட்கார்ந்த இடத்திலிருந்தே... ஓ இதான் அந்த "கவுச் பொட்டடோ"-வா.

அட அத இன்னாமோ சொல்ராங்கப்பா... ஆங்க் "ஐடெண்ட்டி தெஃப்ட்", அதாம்பா நம்ம விசயங்கள நமக்கு தெரியாம அடுத்தவன் ஆட்டைய போடுரது. இது சின்ன விசயதுலேருந்து பெரிய விசயம் வரைக்கும் நடந்துகிட்டு இருக்கு. நம்ம பேசாத பில்லுக்கு நமக்கு பில்லு வருது, நம்ம வாங்காத பொருளுக்கு பற்று அட்டை-க்கார வங்க்கியிலுருந்து பணம் கட்ட சொல்வது, இப்படி இந்த பட்டியல் நீண்டு கொண்டு போகிறது... எங்க போயி முடிய போகுது?

"ஐடெண்ட்டி தெஃப்ட்" என்பது "ஐடியா தெஃப்ட்"-ஆக அல்லது "மனசு தெஃப்ட்"-ஆக... நீங்க செய்யல்லாம்னு மனசுல நினைக்கிறத உங்களுக்கு அருகில் உள்ள ஒருவர் அல்லது உங்களுடன் ஏதாவது ஒரு வகையில் தொடர்பு உடைய ஒருவர் அதை செய்துவிட்டு இருப்பார்.

"கால் கடுக்க" நின்ன காலம் போய் "மனசு நடுங்க" வேண்டிய காலமா ஆயிடுச்சி.

சோம்பேரிகளான நாம் இனி அடிக்கடி உச்சரிக்க போகும் வார்த்தை - "நான் அவன் இல்லை".

சமையல் விமர்சனம்

சினிமா விமர்சனம், கதை, பாட்டு இப்படி பார்த்துகிட்டு இருக்கோம். ஒரு வித்தியாசமா இருக்கட்டுமே...அதனால இப்ப "சமையல் விமர்சனம்". ஒரு புதிய முயற்சியா சமையல் குறிப்பு பத்தி பார்க்க போறோம்.

சமையல் நிகழ்ச்சினா உங்களுக்கே தெரியும், அவங்க சமைக்கிரத விட அவங்க பேசி சமாளிக்கிரதே பெரிய விசயமா இருக்கும். ஏன்னா உங்க கவனம் எல்லாம் அவங்க பேச்சில இருக்கனும், சமயல் (குறிப்பு)-ல இருக்க கூடாது, அதுக்குத்தான். இந்த "சமையல் விமர்சனம்" நிகழ்ச்சியும் அப்படிதான்...உண்மைய சொன்னா, நம்ம பாணியில சொன்னா இது ஒரு "நக்கல் சமையல்"

இன்று ஒரு குவிக் ரெசிப்பி, மைக்ரோவேவ் ஓவன்ல, அஞ்சு நிமிஷத்தில் அல்வா, அதுவும் உடல் ஆரோக்கியதிற்கு தீங்கு இல்லாத, சுகர் பேஸண்ட்லாம் கூட சாப்பிடலாம்...அத்திப்பழ அல்வா.

என்னடா அல்வா-வானு நினைக்காதீங்க, நிறைய பேருக்கு பிடிச்ச ஸ்வீட், குறிப்பிட்டு சொல்லனும்னா சிலபேருக்கு அல்வா சாப்பிட பிடிக்கும், பல பேருக்கு அல்வா குடுக்க பிடிக்கும். (உன்களுக்கு எப்படி?)

இதோ தேவையான பொருள்கள்:
1. அத்திப்பழம் - 100 கிராம், நீங்க உலர்ந்த அத்தி பழத்த எடுத்து சுமார் 1 மணி நேரத்துக்கு ஊர வச்சிக்கனும். (என்ன முரைக்கிறீங்க? 5 நிமிஷம்-னு சொல்லிட்டு 1 மணி நேரம்-னு சொல்லுரனேனு நினைக்கதீங்க, ஊர வைக்கிரத "பிரிப்பரேஸன் டைம்"-னு சொல்லனும்..ஹி..ஹி)
2. பால் பவுடர் - 100 கிராம். (குழந்தைகளுக்கு குடுக்கிறது இல்லீங்கோ)
3. ஜீனி (அதிகம் இனிப்பு தேவைபட்டால்)
4. முந்திரி பருப்பு - 10 கிராம் (பாதியாக பிரித்தது)
5. பாதாம் பருப்பு - 10 கிராம் (கடையில ஃபிளேக்ஸா கிடைக்குமே அது)

பார்த்தீங்களா நேரம் மட்டும் இல்லீங்க தேவையான பொருள் கூட 5 தான்.

ரெடியா...அல்வா கிண்டுவோமா?

ஊர வச்ச அத்தி பழத்த எடுத்து மிக்ஸியில போட்டு நல்ல விழுதா அரைச்சிடுங்க. அரைக்கும் போது ஊர வச்ச தண்ணீரயே விட்டு அரைச்சிக்கலாம். அரைச்ச அத்தி விழுத ஒரு வாய் அகலமான பாத்திரத்தில் கொட்டி (அகலமான வாய்-ன உடனே உங்க வாய்-னு நினைச்சிகாதீங்க...அது நீட்டு...ஐ மீன் வாய் நீளம்) அது கூட பால் பவுடர சேர்த்து நல்ல கலக்கி, நான் முன்னமே சொன்ன மாதிரி இனிப்பு அதிகம் தேவைபட்டால் ரெண்டு ஸ்பூன் ஜீனி சேத்துக்கலாம். இந்த கலவைய ஒரு 3 நிமிஷம் மீடியும் ஹீட்ல குக் பண்ணுங்க. ஏன்னா மில்க் சாலிட்ஸ் ரொம்ப சாஃப்ட், ஈஸியா அத்தி பழத்தோட மிக்ஸ் ஆகி நல்லா வெந்து கம கம-னு இருக்கும். 3 நிமிஷம் ஆகிடுச்சி, எடுத்துடலாம். வேறு ஒரு கப்புல மாத்தி அது மேல முந்திரி மற்றும் பாதாம் வச்சு இப்படி டெக்கரேட் பண்ணி பரிமாரலாம்.

ம்..ம்..வாசனை அருமையா இருக்கு (பிளாக்-ல படிகிற உங்களுக்கு தெரிய போவுதா என்னா?) வாரம் ஒரு முறை இத சாப்பிடலாம் வயிற்றுக்கு ரொம்ப நல்லது, மல சிக்கல் குணமாகும்.

என்ன நேயழ்கலே நீழ்ங்க அச்சிபழ அழ்வா செழ்ஞ்சி ஷாப்டு பாழுங்க...(சாழி...அழ்வா வாயில ஒட்டிகிட்டு அதான் வாய் கொழருது)

(பிஹைண்ட் த ஸ்கிரீன் - அன் எடிட்டெட் ஸாட்ஸ் நம்ம மக்களுக்காக)

பிரசெண்டர்: ஏன்ங்க 3 நிமிஷம் போதுமா?
ஒருவர்: போதது, 5 நிமிஷம்-னு சொல்லிட்டோம், 1 நிமிஷம் அரைக்க, 1 நிமிஷம் கலக்க, பாக்கி 3 நிமிஷம் குக் பண்ண.
இன்னொருவர்: அது சரி, நமக்கு டைம்தான் முக்கியம், டேஸ்ட் பத்தி கவல இல்ல.
பிரசெண்டர்:நான் இன்னைக்கு டேஸ்ட் பண்ணவே இல்ல, கம கமன்னு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். டேஸ்ட் பண்ணியிருந்தா அம்மாடி... நாக்கு நம நமன்னு போயிருக்கும் போல.

பின் குறிப்பு: உண்மையில் இது ஒரு நல்ல ரெசிப்பி, ரோஜா குல்கந்து போல - இது ஒரு நல்ல மலம் இலக்கி (லக்ஸாடிவ்).

துளி...துளி...பனித்துளி

ஊரெல்லாம் பனி வெண்மை
கொல்லுது நண்பரில்லா தனிமை
சொல்லவா ஒரு உண்மை?

என்...
பக்கத்துல ஒரு எருமை
அதன் நிறம் கருமை
குணம் ரொம்ப அருமை

ஆனா...
கொஞ்சம் கூட இல்ல திறமை
அதனால...
எனக்கு மிஞ்சியது வெறுமை.
அது...
ஆண்மை-யோ இல்ல பெண்மை-யோ

எங்க...
HR பாலிசி ரொம்ப கடுமை
அது பேச சொல்லுது இனிமை
தவிர்க்க சொல்லுது பகைமை

ஆக... அமெரிக்காவில்
நமக்கு வேண்டியது மன வலிமை

ரோபோ ஃபீவர் வந்துடுச்சி....

என் பாணியில் சொல்லவா?
பேர கொஞ்சம் பிரிச்சி மேயவா?

ரோபோ... ரோ + போ
துணை எழுதுகளாகிய ரெட்டை கொம்பையும், கால் எழுத்தையும் எடுத்துட்டு படிங்க...

ரோபோ... ர + ப
அதாங்க, சங்கரோட பிரமாண்டம், சுஜாதவோட ஹைடெக் ரெண்டும் இல்லன்னா ரோபோ... ர ப... புரிய வில்லை?
ர ப... 'ர'ஜினி 'ப'டம்

ஆஹா...ஆஹா எஃப்.எம்-ல கேட்டேன்...
அரிசி இடிச்சா....மாவு
ரோபோ அடிச்சா....சாவு

ரோபோ-வாக அய்யா ராமாதாசு...
அடிக்கடி எம்ப்லாயர மாத்துனா அதிக துட்டு கிடைக்கும்
அது "ஐ.டி" பாலிஸி
அடிக்கடி கட்சிய மாத்துனா அதிக சீட்டு கிடைக்கும்
இது "அய்யா" பாலிஸி