Showing posts with label அமெரிக்கா | அனுபவம். Show all posts
Showing posts with label அமெரிக்கா | அனுபவம். Show all posts

முந்தி முந்தி...

முந்தி முந்திச் சென்றேன்
முச்சந்தியில் முட்டி நின்றேன்
முதலில் முட்டியது நானில்லை என்று
முரண்டு பிடித்ததில் - பயன் ஏதுமில்லை.


அபராத புள்ளிகள் மூன்று
அபராத வெள்ளிகள் முன்னூறு
முச்சந்தி என்பதால்
மூன்றும் முன்னூறும் - முழுவதுமாய் எனக்கே.


முந்திச்செல் என்று ஒரு மூளை
ஊளையிட்டாலும், இப்போது
மூன்றும் முன்னூறும்தான் முந்திச் செல்கின்றன
முந்தாமல் நான் – முழுக்கட்டுப் பாட்டில்.